அமெரிக்கா மற்றும் ஜெர்மனி நாடுகள் உக்ரைனுக்கு மேலும் ராணுவ உதவிகள் வழங்கப்படும் என அறிவிப்பு..!

0 974

உக்ரைனுக்கு மேலும் ராணுவ உதவி வழங்கப்படும் என அமெரிக்கா மற்றும் ஜெர்மனி நாடுகள் அறிவித்துள்ளன.

ராணுவ உதவிகள் கோரி நட்பு நாடுகளிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்ததையடுத்து, பிரான்ஸ் கவச போர் வாகனங்கள் அனுப்பப்படும் என அறிவித்தது.

பிரான்ஸை தொடர்ந்து தற்போது அமெரிக்கா மற்றும் ஜெர்மனியும் கூடுதல் ராணுவ உதவிகளை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளன.

உக்ரைனுக்கு நிதி, மனிதாபிமான மற்றும் ராணுவ உதவி தேவைப்படும் வரை தொடர்ந்து வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ஜெர்மனி அதிபர் ஷோல்ஸூம் உறுதியளித்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments