பெண் காவலர்களிடம் தவறாக நடந்து கொள்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - டிஜிபி..!

பெண் காவலர்களின் பிரச்சனைகளை களைய ஆனந்தம் எனும் பயிற்சி வழங்கப்படுவதாகவும், பெண் காவலர்களிடம் தவறாக நடந்து கொள்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
சென்னை புதுப்பேட்டை காவலர் பல்பொருள் அங்காடியில் மின்தூக்கி வசதி, ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி உள்ளிட்டவைகளை தொடங்கி வைத்தபின் பேசிய அவர், கடந்த ஓராண்டில் சாதி, மதத்தை குறிவைத்து தாக்கும் சம்பவம் நடைபெறவில்லை எனவும், காவலர்களின் சிறந்த பணியால் தமிழ்நாட்டில் அமைதி நிலவுவதாகவும் தெரிவித்தார்.
Comments