அமெரிக்காவில் சுற்றுலாப் பயணிகள் முன் குட்டியை ஈன்றெடுத்த சாம்பல் திமிங்கலம்..!

அமெரிக்காவில் சுற்றுலாப் பயணிகள் முன் குட்டியை ஈன்றெடுத்த திமிங்கலம் அதனை முதுகில் ஏற்றி சுற்றுலாப் பயணிகளுக்குக் காட்டிச் சென்றது.
கலிபோர்னியாவில் உள்ள டனா பாயிண்ட் என்ற இடத்தில் 35 அடி நீளமுள்ள சாம்பல் திமிங்கலம் உலாவிக் கொண்டிருந்தது.
இதனைப் பார்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் படகுகளில் சென்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த திமிங்கலம் அழகிய குட்டியை ஈன்றெடுத்தது.
இதனைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்தனர். அடுத்த சில நொடிகளில் தாய் திமிங்கலம் தனது குட்டியை முதுகில் ஏற்றி சுற்றுலாப் பயணிகளுக்கு காட்டிச் சென்றது.
Comments