இந்தியன் ரயில்வே வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது..!

0 1419

 அரியலூர் அருகே இந்தியன் ரயில்வே-யில் வேலை வாங்கித் தருவதாக கூறி 11 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜெமீன் மேலூரைச் சேர்ந்த சிவா, மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரில், தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய நபர் ரயில்வே வேலை வாங்கித் தருவதாக கூறி 11 லட்ச ரூபாய் பெற்று, டிக்கெட் பரிசோதனை அலுவலர் பணிக்கான போலி பணி நியமன ஆணை வழங்கி ஏமாற்றியதாக குறிப்பிட்டிருந்தார்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த தாமோதரன், கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவாஜி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments