உரிமையாளரை தாக்கி கீழே தள்ளி விட்டு காரை தாறுமாறாக ஓட்டிச் விபத்து ஏற்படுத்திய மர்ம நபர்கள்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்..!

0 1342
உரிமையாளரை தாக்கி கீழே தள்ளி விட்டு காரை தாறுமாறாக ஓட்டிச் விபத்து ஏற்படுத்திய மர்ம நபர்கள்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்..!

கோவையில் கார் வாங்குவதுபோல் நடித்து, உரிமையாளரை தாக்கி கீழே தள்ளிவிட்டு, காரை திருடிச்செல்லும்போது, தாறுமாறாக ஓட்டி, விபத்து ஏற்படுத்தும் காட்சிகள், சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

கணபதி நகரைச்சேர்ந்த வெங்கடேஷ், தனது காரை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்ததையடுத்து, இதுதொடர்பாக பேசிய நபர்கள், காரை பார்க்க புதன்கிழமை வந்துள்ளனர். காரை ஓட்டிப் பார்க்க விரும்புவதாக அவர்கள் கேட்டதையடுத்து, வெங்கடேஷ் மற்றும் காரை வாங்க வந்தவர்களில் ஒருவர் பின்சீட்டில் அமர்ந்திருக்க, மற்றொருவர் ஓட்டியுள்ளார்.

சக்தி சாலையில் திடீரென வெங்கடேஷை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கீழே தள்ளிவிட்டு, காரை அவர்கள் திருடிச்சென்றதாக கூறப்படுகிறது. கோவில்பாளையம் சந்தைப்பகுதியில் கார் தாறுமாறாக மோதியதில் சிலர் காயமடைந்த நிலையில், தற்போது சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments