பழங்குடியினருக்காக கட்டப்படும் வீடுகள் தரம் குறைவு.. 2 பேரை பணியிடை நீக்கம் செய்த காஞ்சிபுரம் ஆட்சியர்..!

0 1680
பழங்குடியினருக்காக கட்டப்படும் வீடுகள் தரம் குறைவு.. 2 பேரை பணியிடை நீக்கம் செய்த காஞ்சிபுரம் ஆட்சியர்..!

காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காட்டில் இருளர் பழங்குடியினருக்காக புதிதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள் தரமற்று இருந்ததால், இரண்டு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

புதிதாக கட்டப்பட்டுவரும் குடியிருப்புகளை பார்வையிட அமைச்சர்கள் வரவிருந்த நிலையில், முன்னதாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

4 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் ஒவ்வொரு குடியிருப்பும் தரமற்று இருப்பதை கண்ட ஆட்சியர், ஒப்பந்ததாரர் பாபு என்பவரை அழைத்து கண்டித்தார்.

இதுதொடர்பாக 2 தினங்களாக விசாரணை மேற்கொண்டபின், வாலாஜாபாத் ஊராட்சிய ஒன்றிய உதவி பொறியாளர் சாருலதா, கள ஆய்வாளர் சுந்தரவதனம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments