பெங்களூரு - சென்னை இடையே 8 வழி விரைவுச்சாலை அமைக்கும் பணிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த மத்திய அமைச்சர்..!

0 1968

பெங்களூரு - சென்னை இடையிலான 8 வழி விரைவுச்சாலை அமைக்கும் பணியை, ஹெலிகாப்டரில் சென்றும், தரைமார்க்கமாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆய்வு மேற்கொண்டார்.

16 ஆயிரத்து 730 கோடி ரூபாய் செலவில் 262 கிலோ மீட்டர் தொலைவு விரைவு சாலை அமைக்கும் பணிகளுக்கு, கடந்த மே மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

கர்நாடகாவில் இருந்து ஆந்திரா வழியாக தமிழ்நாட்டை இணைக்கும் வகையில் கட்டமைக்கப்படும் இந்த சாலையில் வியாழக்கிழமையன்று ஆய்வு நடத்தப்பட்டது.

மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் இந்த விரைவுச்சாலை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், பெங்களூரு - சென்னை இடையேயான தூரம் 300 கிலோ மீட்டரில் இருந்து 262 கிலோ மீட்டராக குறையும் என்றும் கட்கரி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments