பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காய் வழங்கக்கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

0 1242

பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காய் வழங்கக்கோரி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திடும் வகையில், பொங்கல் தொகுப்பில் தேங்காயும் வழங்கக்கோரி நாகை, தேனி, ராணிப்பேட்டை, நாமக்கல், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரத்தில் கையில் தேங்காய் மற்றும் தென்னங்கன்றுகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர், ரேஷன் அடைகளில் ஒரு குடும்ப அட்டைக்கு மாதம் 10 தேங்காயும், 2 லிட்டர் தேங்காய் எண்ணையும் வழங்கக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments