முதுமலை புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டுப்பன்றிகள் ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சலால் உயிரிழப்பு!

0 853

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஏராளமான பன்றிகள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவை ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாக முதுமலை மற்றும் அதனை ஒட்டியுள்ள பந்திபூர் சரணாலயத்தில் 250க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்தன. இந்நிலையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவத்துறை சார்பில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் அரியவகை ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து உயிரிழந்த பன்றிகளின் உடல்கள் தெப்பக்காடு வனப்பகுதியில் எரிக்கப்பட்டு வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments