தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

0 1445

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 6 கோடியே 20 லட்சத்து 41 ஆயிரத்து 179 பேர் என்றும், சோழிங்கநல்லூர் சட்டமன்றத்தொகுதி அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுகம் தொகுதி குறைந்த வாக்காளர்களை கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சத்ய பிரதா சாஹூ, தமிழ்நாட்டில் வாக்காளர் அட்டையுடன் 3 கோடியே 82 லட்சம் பேரின் ஆதார் எண் விவரம் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments