கோயில் திருவிழாவின்போது குண்டத்தில் தவறி விழுந்து முதியவர் படுகாயம்

0 1412

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கோயில் திருவிழாவில் குண்டம் இறங்கிய 65 வயது முதியவர், தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

அளுக்குளியில் உள்ள செல்லாண்டியம்மன் கோயிலில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் இன்று காலை நடைபெற்றது.

ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் குண்டம் இறங்கியபோது, தவறி குண்டத்தில் விழுந்தார். பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அவரை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments