தி புரொபெஷனல் கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஐ.டி.ரெய்டு..!

0 15112
தி புரொபெஷனல் கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஐ.டி.ரெய்டு..!

இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் கிளைகள் கொண்டு 35 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் தி புரொபெஷனல் கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் நாடு முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் மட்டும் 6 இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றது. கொரோனா காலக்கட்டத்தில் கூரியர் மூலம் அதிகளவில் பொருட்கள் பரிமாற்றம் நடைபெற்றதாகவும், அந்த வருவாய்க்கு முறையாக கணக்கு காட்டவில்லை எனவும் பிற ஏஜெண்டுகள் மூலமாக கூரியர் செய்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments