திருவண்ணாமலையின் மீது தடையை மீறி ட்ரோனை பறக்க விட்ட ரஷ்ய இளைஞர்.. கேமராவை பறிமுதல் செய்த வனச்சரக அதிகாரிகள்..!

0 1717
திருவண்ணாமலையின் மீது தடையை மீறி ட்ரோனை பறக்க விட்ட ரஷ்ய இளைஞர்.. கேமராவை பறிமுதல் செய்த வனச்சரக அதிகாரிகள்..!

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது, தடையை மீறி ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட ரஷ்ய நாட்டு இளைஞரிடம், வனச்சரக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரமணாஸ்ரமம் அருகே தங்கியிருக்கும் சர்ஜே என்ற இளைஞர், அருணாச்சலேஸ்வரர் கோயில் மற்றும் மலையேறும் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் படம் பிடித்ததாக, கூறப்படுகிறது.

இளைஞரிடம் இருந்த ட்ரோன் கேமரா மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், தனது யுடியூபில் பதிவிடுவதற்காக படம் பிடித்ததாக விசாரணையின்போது,ரஷ்ய இளைஞர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments