ஹிஜாப் அணியாமல் செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனை நாடு திரும்பக்கூடாது என பலர் செல்போனில் மிரட்டல்..?

0 2499
ஹிஜாப் அணியாமல் செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனை நாடு திரும்பக்கூடாது என பலர் செல்போனில் மிரட்டல்..?

ஹிஜாப் அணியாமல் செஸ் போட்டியில் பங்கேற்ற ஈரான் வீராங்கனை சாரா காதெம், நாடு திரும்பக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானில், மஹ்சா அமினி மரணத்தை தொடர்ந்து ஹிஜாப்புக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், கஜகஸ்தானில் நடைபெற்ற செஸ் போட்டியில் வீராங்கனை சாரா காதெம், ஹிஜாப் அணியாமல் பங்கேற்றார்.

இதனால், நாடு திரும்பக்கூடாது என சாரா காதெமுக்கு பலர் செல்போன் மூலம் எச்சரிக்கை விடுத்ததாகவும், அவரது குடும்பத்தினருக்கும் மிரட்டல் அழைப்புகள் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, சாரா காதெம் ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments