முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற விளையாட்டு வீரர்கள்

ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப்பள்ளிகளுக்கு இடையேயான 3வது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவ, மாணவிகள், சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற போட்டியில், தமிழ்நாட்டு மாணவர்கள் 10 தங்கம், 27 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 67 பதக்கங்கள் வென்றதன் மூலம், தமிழ்நாடு 5வது இடத்தை பிடித்தது.
இதைத்தொடர்ந்து, அரியலூர் மாவட்ட இருளர் இன மக்கள் முந்திரி சேகரம் செய்யும் உரிமைக்கான ஆணைகளை, முதலமைச்சர் வழங்கினார்.
இருளர் மக்கள் முந்திரி சேகரம் செய்ய 966 புள்ளி 55 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் 500 குடும்பங்கள் பயனடைவதோடு, முந்திரி தோட்டங்களில் கூலித் தொழிலாளர்களாக பணிபுரிந்த இருளர் இன மக்கள், தற்போது தொழில் முனைவர்களாக மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Comments