மதுபோதையில் சாலையின் இரும்பு தடுப்பு மீது மோதி ரகளை.. தட்டிக்கேட்ட போலீஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக இருவர் கைது..!

0 1659

புதுச்சேரி யூனியம் பிரதேசம் காரைக்காலில், மதுபோதையில் சாலையின் இரும்பு தடுப்பு மீது மோதி ரகளை செய்து தட்டிக்கேட்ட போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்கரை பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த போலீசார், இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்து பேரிகார்டு மீது மோதி ரகளை செய்த இரு இளைஞர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சமீபத்தில் சாலையில் காவல்துறையினர் வைத்திருந்த பேரிகார்ட்டை வாகனத்தில் இருந்தபடி இழுத்து சென்று அட்டகாசத்தில் ஈடுபட்ட இருவர் எனத் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments