2 1/2 வயது பெண் குழந்தை கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தையை விட்டுவிட்டு தலைமறைவான பெற்றோர் ..!
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இரண்டரை வயது பெண் குழந்தை கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தையை விட்டுவிட்டு பெற்றோர் தலைமறைவாகியுள்ளனர்.
சென்னை பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த திலீப் குமார், ஹேமலதா தம்பதியினர் தங்களது இரண்டரை வயது பெண் குழந்தையுடன் 6 மாதங்களுக்கு முன்பு ஆலங்குளத்தில் தங்கி, திலீப் குமார் காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகவும், ஹேமலதா ஜவுளிக் கடையிலும் பணியாற்றி வந்தனர்.
குழந்தை வீட்டில் தவறி விழுந்ததாகக் கூறி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு கடந்த 4 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பெற்றோர் மருத்துமனையில் இருந்து திடீரென தலைமறைவாகினர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments