பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16, 932 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

0 1469

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 12,13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் 16 ஆயிரத்து 932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சென்னையில் கோயம்பேடு, மாதவரம், தாம்பரம் உட்பட 5 இடங்களில் இருந்து மட்டும் 10 ஆயிரத்து 749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் இதற்காக 12 முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், மக்கள் பண்டிகை முடிந்து ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக வரும் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை 15 ஆயிரத்து 519 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments