புத்தாண்டு விழாவில் மேடையில் நடனமாடியபோது துப்பாக்கிச்சூடு.. மத்தியப்பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது போலீசார் வழக்குப்பதிவு..!

0 1382

மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ சுனில் சரஃப், புத்தாண்டு விழா மேடையில் நடனமாடியபோது கைத்துப்பாக்கியால் வான்நோக்கி சுட்டதாக கூறப்படும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

துப்பாக்கிச்சூட்டில் அங்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்க வாய்ப்பிருப்பதால், எம்.எல்.ஏ சுனில் சரஃப் மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில உள்துறை அமைச்சர் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

அதன் பேரில், கோட்மா நகர் போலீசார், சுனில் சரஃப் மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அந்த வீடியோவில் காணப்படுவது தீபாவளி துப்பாக்கி என சுனில் சரஃப் விளக்கமளித்துள்ளார்.

இரு மாதங்களுக்கு முன், ரயில் பயணத்தின்போது மற்றொரு எம்.எல்.ஏவுடன் சேர்ந்து, திருமணமான பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக சுனில் சரஃப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments