மெதுவாக சென்று கொண்டிருந்த காரின் பின்னால் வேகமாக வந்த மணல் லாரி மோதி விபத்து.. 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!

0 2189

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே, போக்குவரத்து நெரிசலால் மெதுவாக சென்று கொண்டிருந்த காரின் பின்னால் வேகமாக வந்த மணல் லாரி மோதியதில், ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம், சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அய்யனார் பாளையம் பேருந்து நிறுத்தத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக, வாகனங்கள் மெதுவாக சென்றுகொண்டிருந்தன.

அப்போது, லாரி ஒன்றின் பின்னால் வந்து கொண்டிருந்த காரின் பின்னால், வேகமாக வந்த மற்றொரு மணல் லாரி மோதியதில், இரண்டு லாரிகளுக்கு இடையே கார் சிக்கி, அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில், இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் விஜய், தனது தாயார் வசந்தலட்சுமி, மனைவி வத்சலா , மகன்கள் விஷ்ணு, அதீர்த் ஆகியோருடன் கேரளாவில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, விபத்து நேரிட்டதாக, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments