பாகிஸ்தான் இந்தியாவிடம் சரணடைந்த புகைப்படத்தை பகிர்ந்து பாகிஸ்தானை கேலி செய்த தலிபான் தலைவர்

0 5153

1971-ம் ஆண்டு பாகிஸ்தான் இந்தியாவிடம் சரணடைந்த புகைப்படத்தை பகிர்ந்து பாகிஸ்தானை தலிபான் தலைவர் கேலி செய்துள்ளார்.

பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே வார்த்தை மோதல் நிலவிவரும் நிலையில், தலிபான் தலைவரும் துணைப் பிரதமருமான அகமது யாசிர், வங்கதேசம் உருவாகுவதற்கு வழிவகுத்த 1971-ம் ஆண்டு போரில் பாகிஸ்தான் தோல்வியை ஏற்றுக்கொண்டு டாக்காவில் கையெழுத்து போடப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கேலி செய்துள்ளார்.

தங்கள் மீதான ராணுவத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் நினைக்க வேண்டாம் என்றும், தங்கள் மீது நடத்தப்படும் எந்த ஆக்கிரமிப்பு முயற்சிக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments