இந்தியாவிலேயே முதல்முறையாக மூத்த குடிமக்களுக்கான தனி மருத்துவமனை விரைவில் திறக்கப்படும் - மா.சுப்ரமணியன்..!

இந்தியாவிலேயே முதல்முறையாக மூத்த குடிமக்களுக்கான தனி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
(சைதாபேட்டையில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் பேசிய அவர்,) சென்னை கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட் வளாகத்தில்
230 கோடி ரூபாய் செலவில் 1020 படுக்கை வசதிகளுடன் பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், 5 மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
Comments