''பணமதிப்பிழப்பில் மலிவான அரசியல் செய்த கட்சிகள் வெட்கப்பட வேண்டும்..''- அண்ணாமலை..!

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை வைத்து தவறாக பிரச்சாரம் செய்த போலி பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சில வேலையற்ற அரசியல் தலைவர்களின் வெறும் பேச்சுக்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தைப் போல ஒருதலைப் பட்சமான சர்வாதிகார முடிவுகள், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் எடுக்கப்படவில்லை என்பதை இந்தத் தீர்ப்பு உறுதி செய்துள்ளதாகவும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை வைத்து மலிவான அரசியல் செய்த எதிர்க்கட்சிகள் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Comments