கோயிலில் பொங்கல் வைப்பதில் மோதல்.. கல், கட்டைகளால் தாக்கிக் கொண்ட கும்பல்..!
கோயிலில் பொங்கல் வைப்பதில் மோதல்.. கல், கட்டைகளால் தாக்கிக் கொண்ட கும்பல்..!
சிவகங்கை மாவட்டம் முதுவன் திடல் கிராமத்தில் கோயிலில் பொங்கல் வைப்பதில் இருதரப்பினர் மோதிக் கொண்டனர்.
தேர்தல் முன்விரோதத்தால் கிராமத்தில் 3 கோஷ்டிகள் இருப்பதாக கூறப்படும் நிலையில் அங்குள்ள விநாயகர் கோயிலில் ஒரு தரப்பினர் பொங்கல் வைப்பதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
எனினும், பொங்கல் வைக்கப்பட்ட நிலையில், பொங்கலிடப்பட்ட பாத்திரத்தை சேதப்படுத்தியதால் இருதரப்பினரும் கல், கட்டைகளை எடுத்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து, இருதரப்பைச் சேர்ந்த 38 பேர் மீது வழக்குப்பதிந்து பழையனூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Comments