டெல்லியில் காரின் அடியில் சிக்கி இளம்பெண் உயிரிழந்த விவகாரம் : கைதான நபர்களுக்கு தண்டனை வழங்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்..!

0 1892
டெல்லியில் காரின் அடியில் சிக்கி இளம்பெண் உயிரிழந்த விவகாரம் : கைதான நபர்களுக்கு தண்டனை வழங்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்..!

டெல்லியில் காரின் அடியில் சிக்கி பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச்செல்லப்பட்டு இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் கைதான நபர்களுக்கு தண்டனை வழங்கக்கோரி சுல்தான்புரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

காவல்நிலையம் முன்பு திரண்ட ஏராளமான மக்கள் போலீசார் இதனை விபத்து வழக்காக விசாரிப்பதாக கூறி போக்குவரத்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளம்பெண்ணின் சடலம் நிர்வாணமாக மீட்கப்பட்ட நிலையில், உடற்கூறாய்வு அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதனிடையே, கைதான 5 பேரையும், 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க, டெல்லி ரோகினி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments