நாசிக்கில் உள்ள தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து.. 24 மணி நேரத்திற்கு மேலாகியும் தீயை கட்டுப்படுத்த போராட்டம்..!

0 1047
நாசிக்கில் உள்ள தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து.. 24 மணி நேரத்திற்கு மேலாகியும் தீயை கட்டுப்படுத்த போராட்டம்..!

மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 24 மணி நேரத்திற்கு மேலாகியும் தீயை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

முண்டேகான் பகுதியில் உள்ள ஜிண்டால் தொழிற்சாலையில், பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில், ஆலையின் பிற பகுதிகளுக்கும் தீ மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.

சுமார் 10 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள், தொடர்ந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆலையில் தீ பெருமளவு கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை என தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments