பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் வீட்டருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு..!

0 1059
பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் வீட்டருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு..!

சண்டிகரில், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மானின் வீட்டருகே, வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியை சுற்றி வளைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு நிறைந்த பகுதியில் உள்ள பகவந்த் மானின் வீட்டிலிருந்து, சிறிது தூரத்தில் உள்ள ஹெலிபேட் அருகே, வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பகவந்த் மான் வீட்டில் இல்லாத நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு, வெடிகுண்டு பாதுகாக்கப்பாக வைக்கப்பட்டதாகவும், ராணுவ குழுவும் விசாரணை நடத்த வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments