புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக்கொலை.. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்..!

சேலம் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டு இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், குற்றவாளிகளை கைது செய்யும்வரை, உடலை வாங்கமாட்டோம் என, உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாகல்பட்டி கிராமம், செங்கனூரைச் சேர்ந்த ஸ்ரீதர் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியதால், அதேபகுதியை சேர்ந்த பாலாஜி, சிவா, பெருமாள் ஆகியோர் தகராறு செய்துள்ளனர். தகராறு முற்றிய நிலையில், வெளியூரிலிருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டு ஸ்ரீதர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீதர் நேற்று இரவு உயிரிழந்த நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கூலிப்படையைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், எஞ்சிய நால்வரையும் கைது செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட இளைஞரின் உறவினர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
Comments