ஜம்மு காஷ்மீரின் ரஜோரி குண்டு வெடிப்பில் சிக்கி குழந்தை ஒன்று உயிரிழப்பு..!

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி அருகே நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி குழந்தை ஒன்று பலியான நிலையில், 5 பேர் காயமடைந்தனர்.
ரஜோரியின் Dangri பகுதியில், இந்துக்களின் வீடுகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், நேற்று 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இன்று அதே பகுதியில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி குழந்தை ஒன்று பலியானது.
அப்பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த மற்றொரு வெடிபொருள் அகற்றப்பட்டதாக தெரிவித்த போலீசார், பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து டாங்கிரி, ரஜோரியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Comments