நம்பர் பிளேட் இல்லாத காரை ஓட்டி வந்த, டிடிஎப் வாசன்.. காரை பறிமுதல் செய்த போக்குவரத்து போலீசார் ..!

0 5970

சென்னையில் புதிய படத்தின் சிறப்புக்காட்சியை காண, யூடியூபர் டிடிஎப் வாசன் ஓட்டிச்சென்ற நம்பர் பிளேட் இல்லாத காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வடபழனியில் உள்ள திரையரங்கில் 'காலேஜ் ரோடு' என்ற புதிய திரைப்பட முன்னோட்ட காட்சியை காண டிடிஎப் வாசன் சென்றுள்ளார்.

அவர் சென்ற காரில் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்ததை அறிந்த, வடபழனி போக்குவரத்து போலீசார் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அந்த கார் தனது நண்பருடையது என்றும், கர்நாடகா பதிவெண் கொண்ட அந்த கார் பெங்களூருவில் இருந்து பதிவெண் இல்லாமலேயே வந்ததாகவும் போலீசாரிடம் டிடிஎப் வாசன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments