2 ஹெலிகாப்டர்கள் வானில் மோதி விபத்து.. 4 பேர் உயிரிழப்பு..!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில், 2 ஹெலிகாப்டர்கள் வானில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
கோல்டு கோஸ்டிலுள்ள sea world கேளிக்கை விடுதி அருகே, தரையிலிருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர், தரையிறங்க வந்துகொண்டிருந்த மற்றொரு ஹெலிகாப்டர் மீது மோதியது.
ஒரு ஹெலிகாப்டரை அதன் விமானி சாதுர்யமாக மணற்பரப்பில் தரையிறக்கிய நிலையில், மற்றொரு ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது.
அதில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர். மூவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments