பின்னால் வந்த பேருந்தை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகன ஓட்டி பேருந்தின் அடியில் சிக்கி உயிரிழப்பு..!
கேரள மாநிலம் திருச்சூரில், பின்னால் வந்த பேருந்தை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகன ஓட்டி பேருந்தின் அடியில் சிக்கி உயிரிழந்த காட்சிகள், பேருந்தின் முன் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை தனியார் பேருந்து ஒன்று திருச்சூரிலிருந்து, கோழிக்கோடு நோக்கி, சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்தின் முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், திடீரென வலதுபுறமாக சாலையை கடக்க முயன்ற போது, பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
அந்த நபர் வாகனத்துடன் பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்டார்.பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
விசாரணையில் அந்த நபர், பத்தாவூர் பகுதியை சேர்ந்த அப்தூர் கரீம் என தெரிய வந்துள்ளது
Comments