மூன்று துறைமுகங்கள் அனுமதி மறுத்ததால் ஆஸ்திரேலியாவில் நிற்கும் கப்பல்.. பல நாட்களாக கரைக்குத் திரும்ப முடியாமல் பயணிகள் அவதி..!

ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் நிறுத்தப்பட்ட கப்பலில் இருந்து கரைக்கு வர முடியாமல் நூற்றுக்கணக்கான பயணிகள் ஒருவாரமாக சிக்கித் தவிக்கின்றனர்.
நியூசிலாந்து நாட்டின் வெலிங்டனில் இருந்து அடிலெய்டுக்கு புறப்பட்ட வைகிங் ஓரியன் கப்பலுக்கு மூன்று துறைமுகங்கள் அனுமதி மறுத்ததால் தெற்கு ஆஸ்திரேலிய கடல் பகுதியில் அவர்கள் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.
கடல் நுண்ணுயிரிகள், தாவரங்கள், பாசிகள் அல்லது சிறிய விலங்குகள் இருப்பதை ஆஸ்திரேலியாவின் தேசிய கடல்சார் ஒருங்கிணைப்பு மையம் உறுதிப்படுத்தியதையடுத்து அதை சுத்தம் செய்யுமாறு வைக்கிங் ஓரியன் கப்பலின் ஏஜெண்டிடம் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Comments