ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் ஆன்லைன் மூலம் ரூ.37 லட்சம் மோசடி செய்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இளைஞர் கைது..!

தூத்துக்குடியில், ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் ஆன்லைன் மூலம் 37 லட்சம் ரூபாய் மோசடி செய்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த காட்வின் மனோஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகாரில், கத்தார் நாட்டில் உள்ள தனியார் கால்நடை நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா, சிக்கிம் மாநிலங்களிலுள்ள தனியார் நிறுவனங்களிலிருந்து கால்நடைகளுக்கு தேவையான மருந்துகளை வாங்கி அனுப்புமாறு தனது வாட்ஸ்-ஆப்பில் குறுஞ்செய்தி வந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இதனை நம்பி 37 லட்ச ரூபாயை அனுப்பியதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து, சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், மும்பையில் பதுங்கியிருந்த பெடலீஸ்ட் என்பவனை கைது செய்தனர்.
Comments