வீட்டின் அருகே அமர்ந்து மது அருந்தியவர்களை தட்டிக் கேட்டவர் மீது கத்தி, பீர் பாட்டிலால் தாக்குதல் நடத்திய இளைஞர்கள்..!
சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வீட்டின் அருகே மது அருந்தியவர்களை தட்டி கேட்டவர் மீது பீர்பாட்டில் வீசி தாக்குதல் நடத்திய 6பேர் கைது செய்யப்பட்டனர்.
செந்தூர்புரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு இளைஞர்கள் சிலர் அமர்ந்து புத்தாண்டை முன்னிட்டு மது அருந்தி கொண்டு ரகளையில் ஈடுபட்ட வண்ணம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கார்த்திகேயன் தட்டி கேட்டதால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர்கள் அவர் மீது கத்தி மற்றும் பீர் பாட்டிலால் தாக்க முயற்சி செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி உதவியுடன் குற்றவாளிகளை பிடித்தனர்.
Comments