மது அருந்தி கொண்டிருந்த 2பேரை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்..!

ராணிப்பேட்டை அருகே மது அருந்திக் கொண்டிருந்த 2 பேரை கத்தியால் குத்தி கொலை செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வி.சி.மோட்டூரைச் சேர்ந்த குழந்தைவேல் மற்றும் சரவணன் ஆகியோர் நேற்று மாலை புத்தாண்டை முன்னிட்டு அங்குள்ள லாரி மெக்கானிக் செட்டில் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் இருவரையும் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
படுகாயம் அடைந்த இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கொலை செய்த மர்ம நபர் யார், எதற்காக கொலை செய்தார் -முன்விரோதமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments