புத்தாண்டில் உணவு டெலிவரி நெருக்கடியை தவிர்க்க டெலிவரி பாயான ஜொமாட்டோ சி.இ.ஓ..!
ஜொமாட்டோ இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியும் ஆன தீபிந்தர் கோயல் புத்தாண்டு தினத்தன்று, உணவு டெலிவரி பாயாக பணியாற்றியுள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் காரணமாக ஜொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்பவர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்ததை அடுத்து, உணவு டெலிவரி செய்பவர்களுக்கு கடும் வேலை பளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் நெருக்கடியை தவிர்க்க தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் டெலிவரி பாயாக மாறி களத்தில் இறங்கினார்.
அவருக்கு Zomato அலுவலகத்தில் இருந்தே முதல் ஆர்டர் கிடைத்தது. இந்த தகவலை அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
புத்தாண்டு அன்று ஜொமாட்டோ பெற்ற ஆர்டர்களின் அளவு, கடந்த மூன்று ஆண்டு புத்தாண்டு நாட்களில் பெற்ற ஆர்டர்களின் எண்ணிகைக்கு சமமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments