சேலம் அருகே கார் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் பெண் பலி..!
சேலம் அருகே, சாலையில் கவனக்குறைவாக திரும்பிய கார் மீது, தனியார் பேருந்து மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியான நிலையில், இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார்பாளையம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ், அவரது மனைவி உள்பட 3 பேர், இன்று காலை உறவினர் வீட்டிற்கு காரில் சென்றுள்ளனர்.
ராக்கிப்பட்டியில், சாலையின் வலதுபுறமாக கார் சென்ற நிலையில், திடீரென இடதுபுறமாக செல்ல முயற்சித்து, கோவிந்தராஜ் காரை திருப்பிய போது, ஈரோடு நோக்கி சென்ற தனியார் பேருந்து கார் மீது மோதியது.
Comments