புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விதிகளை மீறிய நபர்களிடம் இருந்து 276 வாகனங்கள் பறிமுதல்..!

0 1253

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, சென்னையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 252 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல், விதிகளை மீறி, அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 24 பேர் மீதும் , ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக 22 பேர் மீதும், இரு சக்கர வாகனங்களில் 3 பேர் வீதம் பயணித்ததாக 65 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் விதிகளை மீறி  வாகனம் ஓட்டிய நபர்களிடம் இருந்து 276 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments