நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தை குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக போதையில் மிரட்டல் விடுத்த நபர் கைது..!

மும்பையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்புகளில் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தை ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாகவும் மும்பையில் குண்டு வெடிப்பு நடத்தப்போவதாகவும் அடுத்தடுத்து மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனையடுத்து நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் குவிக்கப்பட்டனர்.
காவல்துறையினர் குடிபோதையில் மிரட்டல் விடுத்த நபர் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments