தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை..!

0 1146

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிறித்தவ தேவாலயங்களில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் புத்தாண்டையொட்டி நடைபெற்ற நள்ளிரவு பிராத்தனையில் திரளானோர் கலந்து கொண்டனர்.

 தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு உலக அமைதி ,ஒற்றுமை ,அன்பு தவழ வேண்டிசிறப்பு திருப்பலி நடைபெற்றது.

 திருவாரூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வேண்பாக்கத்தில் அமைந்துள்ள புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலையில் அமைந்துள்ள புனித சகாய அன்னை ஆலயத்தில் புத்தாண்டு தினத்தையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள ஜென்ம ராக்கினி ஆலயம் , கடற்கரை சாலையில் உள்ள கப்ஸ் தேவாலயம், ரயில் நிலையில் அருகே உள்ள இருதய ஆண்டவர் ஆலயம், வில்லியனூர் மாதா கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments