சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த தனியார் பேருந்து.. அலறியடித்து தப்பித்த பயணிகள்..!

0 2133

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்த நிலையில், அதில் பயணித்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக வெளியேறி உயிர்த்தப்பினர்.

தம்மம்பட்டியில் இருந்து புறப்பட்ட அப்பேருந்து மங்கம்பட்டி அருகே சென்றபோது டீசல் கசிவால் கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்தது.

இதைக்கண்ட பயணிகள் உடனடியாக அலறியடித்து தங்களது உடைமைகளுடன் பேருந்தைவிட்டு இறங்கினர். மளமளவென பரவிய தீயால் பேருந்து கொளுந்து விட்டு எரிந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments