களைகட்ட தொடங்கியது புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு..!

0 1107

புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அசாம்பாவிதங்களை தடுக்க தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசாரும், சென்னையில் மட்டும் 17,500 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

சென்னையில் பைக் ரேஸ், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களை கண்காணிக்க 368 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நட்சத்திர ஓட்டல்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதோடு, கடற்கரைகளில் பொதுமக்கள் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரை கண்காணிக்க ANPR சிசிடிவி கேமராக்கள் உதவியுடன், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் சட்டப்படி கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments