கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் போப்பாண்டவர் 16-ஆம் பெணடிக்ட் காலமானார்..!

0 1383

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் போப்பாண்டவர் 16-ம் பெணடிக்ட் உடல்நலக்குறைவால் காலமானார்.

அவருக்கு வயது 95. வாடிகனில் உள்ள இல்லத்தில் இன்று காலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் கடந்த 1927-ம் ஆண்டு பிறந்த 16-ம் பெணடிக்டின் இயற்பெயர் ஜோசப் ராட்ஸிங்கர். 2005-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி தனது 78-வது வயதில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265-வது திருத்தந்தையாக அவர் பொறுப்பேற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments