2022ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் மழைப்பொழிவு விவரத்தை அறிவித்த சென்னை வானிலை ஆய்வு மையம்..!

0 1555

2022ம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழைக்கான மழை கணக்கிடுதல் முடிவடைந்த நிலையில், இயல்பை விட ஒரு சதவீதம் மட்டுமே கூடுதலாக மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை 445 மி.மீ பெய்துள்ளதாகவும் இது இயல்பை விட 1% கூடுதல் என்றும், தென்மேற்கு பருவமழை 477 மி.மீ பெய்துள்ளதாகவும் இது இயல்பை விட 45% கூடுதல் என்றும் தெரிவித்துள்ளது.

2022ல் தமிழ்நாட்டில் ஆண்டு சராசரி மழைப்பொழிவு இயல்பை விட 22% அதிகம் என்றாலும், 2021உடன் ஒப்பிடுகையில் இது 25 சதவீதம் குறைவு என்றும் சென்னையில் ஆண்டு சராசரி மழைப்பொழிவு 7% கூடுதல் என்றாலும் இது 2021 உடன் ஒப்பிடுகையில் 50 சதவீதம் குறைவு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments