பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் கேட்ட விஏஓ கைது..!

0 3037

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பட்டா மாற்றம் செய்ய இருபத்து ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட தென்னாங்கூர் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். முன்னதாக, அவர் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் லஞ்சம் கேட்பது தொடர்பான ஆடியோ வெளியாகியுள்ளது.

புலிவாய் கிராமத்தைச் சேர்ந்த எல்லம்மாள் என்பவர், தன்னுடைய 36 சென்ட் விவசாய நிலத்திற்கு பட்டா கேட்டு பல முறை மனு அளித்த நிலையில், அவருடைய உறவினரின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, எல்லம்மாள் கிராம நிர்வாக அலுவலர் தனபாலிடம் புகார் தெரிவித்தபோது, லஞ்சம் கொடுத்தால் உடனே பட்டா மாற்றம் செய்து தருவதாக கூறியிருக்கிறார்.

எல்லம்மாள், திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் தெரிவித்ததையடுத்து, வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருந்து, தனபால் லஞ்சப் பணத்தை வாங்கும்போது கையும் களவுமாக பிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments