குஜராத்தில் கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு..!

0 1180

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

அகமதாபாத்-மும்பை நெடுஞ்சாலையில் உள்ள நவ்சாரியில் இன்று அதிகாலை 4 மணி அளவில் கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் 9 பேர் பலியான நிலையில், 15 பேர் பலத்த காயமடைந்தனர்.

பேருந்து டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, கட்டுப்பாட்டை இழந்து பேருந்து ஓடி கார் மீது மோதியதே விபத்துக்கு காரணமென கூறப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments