டிவிட்டர் அலுவலக ஊழியர்கள் சொந்தமாக டாய்லெட் பேப்பர் கொண்டுவர உத்தரவு..!

0 5313

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரிலுள்ள டிவிட்டர் தலைமையகத்தில் உள்ள கழிவறைகளில் வசதி குறைபாடுகள் காரணமாக, ஊழியர்கள் வீட்டிலிருந்து டாய்லட் பேப்பர்களை கொண்டுவரும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தூய்மைப்பணியாளர்கள் இல்லாமல் டிவிட்டர் அலுவலகம் அலங்கோலமாக காட்சியளிப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. கழிவறைகள் நாறுவதால் அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மீதமான உணவுகள் உடலின் துர்நாற்றம் போன்ற இதர பிரச்சினைகளும் எழுப்பப்பட்டுள்ளன. தூய்மைப் பணியாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பிரச்சினை அதிகரித்துள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments