ரிஷப் பந்த் கார் விபத்துக்கு காரணம் என்ன ? வெளியானது பிசிசிஐ அறிக்கை

0 5992

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் கார் விபத்தில் உயிர் தப்பிய சம்பவம் குறித்து பிசிசிஐ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ரிஷப் தனியாக இரவில் கார் ஓட்டி வந்தபோது, கண் அசந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்புகளில் மோதி தீப்பிடித்ததாகவும், கார் கதவை உடைத்துக் கொண்டு, ரிஷப் பந்த் உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஹரியானா அரசுப்போக்குவரத்து பேருந்து நடத்துனர் பரம்ஜித் மற்றும் ஓட்டுனர் சுஷில் குமார் ஆகியோர்,
ரிஷப் பந்த்தை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

காயங்களுடன் உயிர்தப்பிய ரிசப் பந்த், டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, ரிசப் பந்த்தின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments