பொங்கலுக்குப்பிறகு மத்திய அமைச்சரவையில் மாற்றம்?

0 1511

பிரதமர் மோடி தமது அமைச்சரவையை மாற்றியமைக்கப் போவதாக, டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொங்கலுக்குப் பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என, பாஜகவினர் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், மக்களவைத்தேர்தல், மாநில சட்டமன்றத் தேர்தல்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு, கட்சியையும் அமைச்சரவையையும் பலப்படுத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமைச்சர்களின் செயல்திறனுக்கு ஏற்ப, இலாக்காக்களைப் பிரித்தளிக்கவும், நீண்ட காலமாக கட்சிக்காக உழைக்கும் எம்பிக்களுக்கு அமைச்சர் பொறுப்புகளை வழங்கவும் பிரதமர் மோடி மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments